நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் தேதியில் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமைக்கு பதிலாக வரும் ஞாயிற்று கிழமை பதவியேற்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் பாஜக கூட்டணி கட்சி எம்.பிகள் கூட்டத்தில் பிரதமராக தேர்வாகிறார் நரேந்திர மோடி
எதிர்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி?
விரைவில் நடக்க உள்ள காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மக்களவை தலைவராக ராகுல் காந்தி தேர்வாக வாய்ப்பு. ராகுல் காந்தியை எதிர்கட்சி தலைவராக்க கட்சிக்குள் பலரும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய பிரபாகரன் தோற்கவில்லை; திட்டமிட்ட சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு பேசுகையில், தேர்தலில் அதிமுக -தேமுதிக கூட்டணி 1 கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று சரித்திரம் படைத்துள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கும் நன்றி” என தெரிவித்தார்.
மேலும், விஜய பிரபாகரன் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. அதனால்தான் சொல்கிறேன். விஜய பிரபாகரன் தோல்வியடையவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சி அடையவில்லை; வீழ்த்தப்பட்டுள்ளார்.” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?
பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு அமைச்சர் பதவி என டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள் பதவிகள் மற்றும் எந்த துறை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது.
உ.பியின் உணர்வுள்ள மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – பிரியங்கா காந்தி
உத்திரப்பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்கள். கடினமான நேரங்களிலும் போராடும் துணிவை காட்டினீர்கள். நீங்கள் சித்ரவதை செய்யப்பட்டீர்கள், பொய் வழக்குகளுக்கு உள்ளாக்கப்பட்டீர்கள், சிறையில் அடைக்கப்பட்டீர்கள், ஆனால் நீங்கள் பயப்படவில்லை. தேர்தல் பொதுமக்களுடையது, போராடுவதும், வெற்றி பெறுவதும் பொதுமக்கள் என்று பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை தோல்வி – மொட்டை அடித்து கொண்ட பாஜக நிர்வாகி
3 கேபினட் அமைச்சர் பதவி கேட்கும் ஐக்கிய ஜனதா தளம்
பாஜக கூட்டணி அரசில் முக்கிய அமைச்சர் பதவிகளை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 முக்கிய கேபினட் அமைச்சர் பதவிகளை ஐக்கிய ஜனதா தளம் கேட்டுள்ளது. ரயில்வே, தரைவழிப் போக்குவரத்து மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறையை ஐக்கிய ஜனதா தளம் கேட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் பதவி கேட்கும் தெலுங்கு தேசம்
மக்களவை சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசத்திற்கு வழங்க சந்திரபாபு நாயு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட 4 கேபினட் மற்றும் 2 இணை அமைச்ர்கள் என மொத்தம் 6 அமைச்சர்கள் பதவியையும் சந்திரபாபு நாயடு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- First Published :

