கடந்த முறை டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டபோது, இந்திய அணியின் விராட் கோலி இந்தியாவுக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பதற்றத்தைக் கட்டுப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியே வெற்றி பெறும் என ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஐசிசியில் பேசியதாவது: இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சூப்பர் பௌலைப் போன்றது என அமெரிக்கர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நான் எப்போதும் விரும்புவேன். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போதும் மிகுந்த சவாலானதாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, இந்திய ரசிகர்களிடமிருந்து அதிக அளவிலான மரியாதையும் அன்பும் கிடைக்கும்.
