என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை. தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மிக்க நன்றி என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதில் முக்கியப் பங்காற்றவிருக்கும் சந்திரபாபு நாயுடுவை, அரசியல் பார்வையாளர்கள் கிங் மேக்கர் என குறிப்பிட்டு வருகிறார்கள்.
ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கவிருக்கிறார.
இந்த நிலையில், கட்சி அடுத்த என்ன செய்யப்போகிறது என்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறார் சந்திரபாபு நாயுடு.
ஆந்திரத்தில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள், மத்தியில் யாருக்கு ஆதரவு அளிப்பது என தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானார்கள் என்றார்.
