நாட்டிலேயே அதிபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி, இந்த முறை 37 தொகுதிகளில் வென்றுள்ளது இந்த தோ்தலில் திருப்புமுனையான விஷயம். கடந்த தோ்தலுடன் ஒப்பிடும்போது இந்த முறை பாஜக வென்றுள்ள இடங்களில் கூட குறைந்த வாக்கு வித்தியாசம்தான் உள்ளது.
இந்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க கூட்டணிக் கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கே வீட்டில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின். சாமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க கூட்டணிக் கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் தில்லி புறப்பட்டார்.
இந்த கூட்டத்தில் புதிய ஆட்சி அமைப்பது, வியூகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், கூட்டணிக் கட்சித் தலைவா்களுடனான ஆலோசனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
