ஒடிசாவில் ஆட்சியமைக்க தேவையான 73 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது.
ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மே 13 முதல் ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாக ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. 21 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஒடிசா மாநிலத்தில், பட்டியல் சாதி (SC) மற்றும் பழங்குடியின (ST) வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளும் அடங்கும். 2019 தேர்தலில், நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) 12 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) 8 இடங்களையும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் மட்டுமே வென்றது.
இதற்கிடையே, 2024 தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக்கை பின்னுக்குத் தள்ளி, பாரதிய ஜனதா கட்சி 76 இடங்களிலும், நவின் பட்நாயக்கின் பிஜேடி 53 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1 இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் 1 இடத்திலும் முன்னணியில் உள்ளன.
நியூஸ்18 தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், ஒடிசாவில் உள்ள பெரும்பாலான மக்களவைத் தொகுதிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்லும் என்று கணிக்கப்பட்டது. அதே நேரத்தில், நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) 6-8 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாநிலத்தில் மொத்தமுள்ள 21 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 13-15 இடங்களைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவித்தது.
Also Read |
Lok Sabha Election Results 2024 LIVE in Tamil | நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதற்கிடையில், ஒடிசா சட்டமன்றத் தேர்தல் 2024-ல் இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி, BJD மற்றும் BJP இரண்டும் சமமான இடங்களில் (62-80) 147 இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு மாநிலத்தில் பிஜேடிக்கு 68-93 இடங்களும், பாஜகவுக்கு 44-72 இடங்களும் கிடைக்கும் என்று கணித்தது.
2019 ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜேடி 112 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதே 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
.
