அந்தநிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் தலைமறைவாக இருந்த அம்ரித் பால் சிங்கை பஞ்சாப் காவல்துறை சுற்றிவளைத்து அதிரடியாக கைதுசெய்தது. அதன்பின்னர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அம்ரித்பால் சிறையிலடைக்கப்பட்டார். இந்த நிலையில்தான், சிறையிலிருந்தபடியே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் காதூர் சாகிப் (Khadoor Sahib) தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார் அம்ரித் பால் சிங். அவருக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோண்மணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் நின்றனர்.

இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் காதூர் சாகிப் தொகுதில், சுமார் 1,38,561 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் அம்ரித் பால் சிங்! மதியம் 3 மணி நிலவரப்படி சுமார் 3,14,735 வாக்குகள் வாங்கியிருக்கும் அம்ரித் பால் சிங் மற்ற பெரிய கட்சிகளின் வேட்பாளர்களை விடவும் லட்சங்களில் வாக்கு வித்தியாசம் பெற்றிருக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத ஏனைய கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றன. தேர்தல் பிரசாரத்துக்கே வராமல், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்தபடியே அம்ரித் பால் சிங் இவ்வளவு ஓட்டுகள் வாங்கிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

