Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

News 18 Exit Poll | நியூஸ் 18-ன் தேர்தலுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது இப்படித்தான்! – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 4, 2024
in அரசியல் செய்திகள்
0
News 18 Exit Poll | நியூஸ் 18-ன் தேர்தலுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது இப்படித்தான்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடு முழுவதும் 95,000 வாக்காளர்களிடம் தேர்தலுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பை நியூஸ் 18 தொலைக்காட்சிக் குழுமம் நடத்தியுள்ளது.

21 மாநிலங்களில் உள்ள 518 மக்களவைத் தொகுதிகளில், வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களின் மனநிலையை நியூஸ் 18 குழுமம் அறிந்தது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு வெவ்வேறு தேதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில் யாருக்கு வெற்றி என்பது ஜூன் 4ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பை நாடு முழுவதும் 21 முக்கிய மாநிலங்களில் நியூஸ் 18 தொலைக்காட்சி குழுமம் நடத்தி உள்ளது.

விளம்பரம்

இந்த கருத்துக் கணிப்பின் தொடக்கத்தில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 180 வாக்காளர்களை சந்தித்து அவர்களின் மனநிலை அறிய திட்டமிடப்பட்டது. இதன் மூலம் 21 மாநிலங்களில் 93, 240 வாக்காளர்களிடம் மெகா கருத்துக் கணிப்பு நடத்தப்பட இருந்த நிலையில்,

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் திட்டமிட்ட அளவை விட அதிக வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதன் காரணமாக 95,000 பேரிடம் மெகா கருத்துக் கணிப்பை நியூஸ் 18 குழுமம் நடத்தி முடித்துள்ளது. 21 மாநிலங்களில் மொத்தம் 518 மக்களவைத் தொகுதிகளில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை துல்லியமாக வழங்குவதற்காக, பல்வேறு அறிவியல் ரீதியிலான முறைகளை நமது குழுவினர் கையாண்டனர்.

விளம்பரம்

கருத்துக் கணிப்பை நடத்துவதற்காகவே, கள ஆய்வு மேற்கொள்ளும் 10 ஏஜென்சிகளை நாடு முழுவதும் களமிறக்கியது நியூஸ் 18 குழுமம். ஒவ்வொரு கள ஆய்வு ஏஜென்சியும் இரண்டு முதல் மூன்று மாநிலங்களில் வாக்காளர்களை சந்தித்து தரவுகளை சேகரித்து வழங்கின.

ஒவ்வொரு வாக்காளரையும் சந்திக்கும் முன்பாக, என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்ற விவரம் அடங்கிய வினாத்தாள் 11 இந்திய மொழிகளில் தயாரித்து வழங்கப்பட்டது. வாக்காளரின் மனநிலையை துல்லியமாக அறிவதற்கு ஏற்ற கேள்விகளும் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டது.

விளம்பரம்

முன்பு போல், தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிக்கு வெளியே நின்று கொண்டு வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துவதை கைவிட்டு, அதற்கு அடுத்த நாள், வாக்காளர்களை சந்தித்து தேர்தலுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பை நடத்தியது நியூஸ் 18 குழுமம்.

முதற்கட்டம் தொடங்கி 6-வது கட்ட வாக்குப்பதிவு வரை இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டது. எனினும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்து வாக்காளர்களிடம் கேள்விகளை கேட்டு துல்லியமான பதில்கள் பெறப்பட்டன.

விளம்பரம்

ஒரு மக்களவைத் தொகுதி என்று எடுத்துக் கொண்டால், அதற்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தபட்ச வாக்காளர்களை சந்தித்து கேள்விகளை எழுப்பினோம். அதில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10 வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நியூஸ் 18 குழுமம் நடத்தியது.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் 15 வாக்காளர்களிடம் கேள்விகளை எழுப்பி பதில்கள் பெறப்பட்டன. அப்போது அவர்கள் வாக்களித்துள்ளனரா? என்று கைவிரல் மையை சரிபார்த்து கள ஆய்வு நடத்தும் அலுவலர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். வீட்டிற்கு ஒருவரிடம் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன.

விளம்பரம்

ஏழாம் கட்டத் தேர்தலில் வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்தே கருத்துக் கணிப்பை நடத்தப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 15 வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பட்டது. நாடு முழுவதும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு குழுக்களாக பிரித்து நமது களப் பணியாளர்கள் கருத்துக் கணிப்பை நடத்தினர்.

அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திட்டமிட்டதை விட அதிகளவாக 7,870 வாக்காளர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு, அவர்களின் மனநிலை துல்லியமாக பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க:  
தியானம் முடித்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை

விளம்பரம்

இதேபோல் கர்நாடகாவில் 6,126 பேரிடமும் மகாராஷ்டிராவில் 89,623 பேரிடம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 14, 400 வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

மேற்குவங்கம், பிகார், ஒடிஷா, அசாம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தராகண்ட், ஹிமாச்சல், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் நியூஸ் 18 தொலைக்காட்சி குழுமம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

.



.

Previous Post

Over 1.4 lakh NOTA votes in Indore: இந்தூரில் 1.4 லட்சத்துக்கும் அதிகமான நோட்டா வாக்குகள்-madhya pradesh lok sabha elections 2024 over one lakh nota votes in indore

Next Post

சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல்

சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In