Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சோனியாவின் 272 Vs ராகுல் காந்தியின் மூஸ்வாலா ஸ்டைல் 295… இந்த தேர்தல் முடிவிலும் எதிரொலிக்குமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 4, 2024
in அரசியல் செய்திகள்
0
சோனியாவின் 272 Vs ராகுல் காந்தியின் மூஸ்வாலா ஸ்டைல் 295… இந்த தேர்தல் முடிவிலும் எதிரொலிக்குமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை நம்பவில்லை என்றும், சித்து மூஸ்வாலா பாடலை மேற்கொள்காட்டியும் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி சுமார் ஒன்றரை மாதமாக நடைபெற்று வந்த நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்துவிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) தான் நடக்கிறது. அதற்குள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் 3வது முறையாக மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

பாஜக கடந்த முறையைவிட இந்த முறை அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றும் என பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த கருத்துக் கணிப்புகளை புறந்தள்ளியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 295 தொகுதிகளில் ”இந்தியா” கூட்டணி வெற்றிபெறும் என கூறியுள்ளார். ”இது கருத்து கணிப்பு அல்ல; மோடி ஊடகத்தின் கருத்துக் கணிப்பு. இது கற்பனைகள் நிறைந்த கருத்துக் கணிப்பு” என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், ”இந்தியா” கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்ற கேள்விக்கு, ”சித்து மூஸ்வாலாவின் 295 பாடலை கேட்டிருக்கிறீர்களா? 295” என்று பதிலளித்தார். ராகுல் காந்தியின் இந்த பதிலை வைத்து பாஜகவினர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

விளம்பரம்

மூஸ்வாலா பாடல் நாட்டின் சட்டத்தை கேள்விக்குள்ளாக்குவதாகவும், அந்த பாடல் ஐபிசி 295ஏ பிரிவுக்கு எதிரானது என்றும், வெறுப்புப் பேச்சு மற்றும் தீங்கிழைக்கும் வகையில் மதம் அல்லது நம்பிக்கைக்கு எதிரான பாடல் என்றும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதையும் படிக்க:
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் யார் ஆட்சி அமைப்பார்? சட்டம் சொல்வது என்ன?

இது ஒருபுறமிருக்க, ராகுல் காந்தி ஒரு எண்ணை தற்போது தெரிவித்ததைப் போல, கடந்த 1999ஆம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தியும் ஒரு எண்ணை கொடுத்தார். அதாவது காங்கிரஸ் கட்சி 272 இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சியமைக்க உரிமை கோரும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 114 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.

விளம்பரம்

 

#WATCH | Congress leader Rahul Gandhi says, “It is not exit poll, it is Modi media poll. It is his fantasy poll.”

When asked about the number of seats for INDIA alliance, he says, “Have you heard Sidhu Moose Wala’s song 295? 295.” pic.twitter.com/YLRYfM4xwW

— ANI (@ANI) June 2, 2024

விளம்பரம்

இந்நிலையில், தற்போது அவரது மகன் ராகுல் காந்தியும் ஒரு எண்ணை குறிப்பிட்டு பேசியுள்ளார். இது உண்மையாகுமா? அல்லது 1999 தேர்தல் முடிவுகளை எதிரொலிக்குமா? என்பது நாளை (ஜூன் 4) பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.

விளம்பரம்

.





.

Previous Post

Satta Bazar: மக்களவைத் தேர்தலும்… ‘சட்டா பஜார்’ கணிப்புகளும் – பரபரக்கும் சூதாட்டம்!

Next Post

Irfan: `யூடியூபர் இர்ஃபான் மீதான நடவடிக்கைக்கு முழுக்கா?' – பாரபட்சமாகச் செயல்படுகிறதா தமிழக அரசு?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Irfan: `யூடியூபர் இர்ஃபான் மீதான நடவடிக்கைக்கு முழுக்கா?' – பாரபட்சமாகச் செயல்படுகிறதா தமிழக அரசு?

Irfan: `யூடியூபர் இர்ஃபான் மீதான நடவடிக்கைக்கு முழுக்கா?' - பாரபட்சமாகச் செயல்படுகிறதா தமிழக அரசு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In