நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, தேர்தல் ஆணையர், செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறை.
பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அணையத்தில் மனு அளித்த நிலையில் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள், பாஜக, காங்கிரஸ் கொடுத்த புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
