Friday, October 30, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பைபர்ஜாய் எங்கே இருக்கிறது?.. இந்தியாவை பாதிக்குமா? குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2023
in அரசியல் செய்திகள்
0
பைபர்ஜாய் எங்கே இருக்கிறது?.. இந்தியாவை பாதிக்குமா? குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Vishnupriya R
Updated: Tuesday, June 13, 2023, 6:57 [IST]
காந்திநகர்: பைபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி பைபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இது தீவிர புயலாக மாறி, மிக தீவிர புயலாக மாறியது. இதைத் தொடர்ந்து மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறிய நிலையில் நேற்று முன் தினம் சூப்பர் புயலாக மாறியது. இது வரும் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது. பைபர்ஜாய் புயல் மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும், வருகிற 15-ஆம் தேதி பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி- பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஸ்டிரா கடல் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், குஜராத்தில் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புயல் காரணமாக 67 ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. குஜராத் மேற்கு ரயில்வே பிராந்தியத்தில் 67 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடல் ஆக்ரோஷமாக இருப்பதாக வரும் 14 ஆம் தேதி வரை தைத்தல் கடற்கரைக்கு யாரும் செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் பெயரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது குஜராத் சௌராஷ்ட்ரா , கச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேற்கு திசை காற்று மட்டும் வெப்ப சலனம் காரணமாக வரும் 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது அதி தீவிர புயலாக வலுவிழந்தே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த புயலால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை என சொல்லப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Cyclone Biparjoy: 67 train services were suspended in Gujarat as it landfalls on June 15.

.

Previous Post

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Next Post

மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியை வெட்டிவிட்டு தப்பிய இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியை வெட்டிவிட்டு தப்பிய இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியை வெட்டிவிட்டு தப்பிய இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In