மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. 7ஆம் கட்ட தேர்தல் நேற்று நிறைவடந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. நாட்டில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்து கணிப்புகளும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, சந்தர்ப்பவாத கூட்டணியான இந்தியா கூட்டணியை மக்கள் நிராகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஏராளமான நலத்திட்டங்களால் நாட்டு மக்கள் பாஜக கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் வகையில் வாக்களித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தியதாக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிக்க:
மக்களவைத் தேர்தலில் வெல்லப் போவது யார்? – நியூஸ்18 மெகா கருத்து கணிப்பு முடிவுகள்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்த கருத்துகணிப்புகள் மோடிக்கு சாதகமான கற்பனை கருத்துக்கணிப்புகள் என சாடினார். மேலும் இந்தியா கூட்டணி நிச்சயம் 295 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்துவிட்டு சென்றார்.
#WATCH | Congress leader Rahul Gandhi says, “It is not exit poll, it is Modi media poll. It is his fantasy poll.”
When asked about the number of seats for INDIA alliance, he says, “Have you heard Sidhu Moose Wala’s song 295? 295.” pic.twitter.com/YLRYfM4xwW
— ANI (@ANI) June 2, 2024
இதற்கிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியா கூட்டணிக்கு 295 இடங்கள் கிடைக்கும் என்றும், எதிர்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
.
