அப்போது வருமான வரிச் சலுகைகளை பெற முயற்சிக்கும்போது, ஏதாவது சேமிக்க வாய்ப்பிருக்கிறதா, ஏதேனும் வழிகள் அதற்கு இருக்கிறதா எனத் தேடுகிறார்கள். அப்படி ஒன்று தான், அஞ்சலகங்களில் வழங்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம். இத்திட்டத்தின் பயனர்கள் சேரும்போது, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி-ன் கீழ், இங்கு சேமிக்கும் தொகைக்கு வருமான வரி விலக்கு தரப்படும். அப்போது பயனருக்கு வரி சேமிப்பு நன்மைகள் கிடைக்கும்.
