Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிரகாஷ்ராஜ் ஒரு கன்னட நடிகர்! தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்! விளாசும் எல்.முருகன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 1, 2024
in அரசியல் செய்திகள்
1
பிரகாஷ்ராஜ் ஒரு கன்னட நடிகர்! தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்! விளாசும் எல்.முருகன்!
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நீலகிரி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரை மீனாட்சி அம்மனை தேசநலனுக்காகவும், பொது மக்கள் நலனுக்காகவும் வேண்டினேன். ஜனநாயக திருவிழாவான தேர்தலில் கடைசிகட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 7 கட்ட தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து உள்ளனர். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி அவர்கள் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற உள்ளார். இந்த நாடு வல்லரசு நாடு ஆக வேண்டும் எனில் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கேள்வி: பிரதமர் அரசியலுக்காக தியானம் செய்வதாக காங்கிரஸ் கட்சியும், பிரகாஷ் ராஜும் கூறுகின்றனரே?

பிரகாஷ் ராஜிடமும், காங்கிரஸ் தலைவரிடமும் என்ன எதிர் பார்க்க முடியும். உலக நன்மைக்காக தான் பிரதமர் தியானம் செய்து வருகிறார். சென்ற தேர்தலின்போது இமயமலையில் மோடி அவர்கள் தியானம் செய்தார். இன்றைக்கு குமரியில் முனிவர் போல தியானம் செய்து உள்ளார்.

கேள்வி: இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?

இந்தியா கூட்டணி தோல்வி நிச்சயிக்கப்பட்ட ஒன்று, அவர்கள் நூறு சீட்டு தாண்டுவதே கஷ்டம். அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஜெயிலுக்கு சென்றுவிட்டுவார். மம்தா, ஸ்டாலின் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதனால் இந்தி கூட்டணி, இல்லாத கூட்டணியாகிவிட்டது. இந்தி கூட்டணியால் நாட்டுக்கு எந்த பிரயோஜனும் இல்லை.

கேள்வி: தமிழ்நாட்டில் பாஜக எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?

தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை நாங்கள் பெற உள்ளோம். இரட்டை இலக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டில் இருந்து மோடிஜிக்கு சமர்பிக்க உள்ளோம்.

கேள்வி: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் மீண்டும் தருவாரா? கருப்பு பணத்தை அழிப்பாரா?

மீடியாக்களாலும், எதிர்க்கட்சிகளாலும் கட்டவிழ்க்கப்பட்ட கட்டுக்கதை, பிரதமர் எந்த இடத்திலும் 15 லட்சம் ரூபாய் தருவேன் என்று சொன்னது கிடையாது. இந்தி தெரியாதவர்கள், முறையாக இந்தி கற்றுக் கொள்ள வேண்டும்.

கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் சிறையில் உள்ளதற்கு காரணம் பிரதமர்தான், பிரதமரின் அடுத்த ஆட்சியில் ஊழல் என்பதே இருக்காது, ஊழல்வாதிகள் சிறையில் இருப்பார்கள். கருப்பு பணத்திற்கு இந்தியாவில் இடமே கிடையாது.

கேள்வி:- கலைஞர் உயிரோடு இருந்தால் யாரும் வாலாட்ட முடியாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறி உள்ளாரே?

கருணாநிதி அவர்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அனைவருக்கும் தெரியும். பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அவர் ஒரு கர்நாடக நடிகர், அவர் அங்கு உள்ள கருத்துக்களை சொல்லலாம், அவரது கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.

வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே 25ஆம் தேதி அன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்ற முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதியான இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜூன் 4ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

.

Previous Post

பாலியல் புகாரில் சிஆர்பிஎஃப் டிஐஜி பணிநீக்கம்!

Next Post

ஒருவழியாக முடிந்தது மக்களவைத் தேர்தல்…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒருவழியாக முடிந்தது மக்களவைத் தேர்தல்…

ஒருவழியாக முடிந்தது மக்களவைத் தேர்தல்...

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இவர் சொல்வதை வைத்து பார்த்தால் பிரதமர் மோடி ஒரு ஹிந்தி காரர் அதாவது வட இந்தியர் அவருக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In