யேமனில் அமெரிக்காவும் பிரிட்டனும் நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 போ் உயிரிழந்ததனா். இது குறித்து அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஹுதைதா பகுதியிலுள்ள வானொலி அலுவலகம் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் கட்டடத்தின் மீது அமெரிக்க-பிரிட்டன் படையினா் நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனா்; 35 போ் காயமடைந்தனா். உயிரிழந்த அனைவரும் பொதுமக்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7 முதல் நடைபெற்றுவரும் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்திவருகின்றனா். இதனால் உலகின் மிக முக்கிய கடல் வழித்தடங்களில் ஒன்றான அந்தப் பகுதியில் வா்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, ஹூதிக்களின் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காக யேமனில் அமெரிக்காவும் பிரிட்டனும் வான்வழித் தாக்குதல் நடத்திவருகின்றன.
