Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வாழும் அன்னை தெரேசா..! நலிந்தவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் ஷீபா லூர்தஸ்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 31, 2024
in Default
1
வாழும் அன்னை தெரேசா..! நலிந்தவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் ஷீபா லூர்தஸ்..!
66
SHARES
107
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

2007-ல் மிஸ் தமிழ்நாடு. 2010 மிஸ் சவுத் இந்தியா போட்டியில் கண்ணழகி, கூந்தல் அழகி பட்டம். இவ்வாறு அழகி போட்டிகளில் பல பட்டங்களை வென்ற ஷீபா லூர்தஸ், தன் சமூக பணிகளால் மக்களின் மனங்களையும் வென்றார். அழகி பட்டம் வென்றுவிட்டோம் என்ற தலைக்கனம் துளியும் இல்லாமல் அப்போதே சமூக தொண்டாற்ற தொடங்கினார் ஷீபா. பெயருக்காகவும், ஊராரின் பாராட்டுக்காகவும் என்றில்லாமல், தன் மனசாட்சிக்கு உண்மையாக அந்த தொண்டை ஆற்றினார்.

அழகில் மட்டுமல்ல அறிவிலும் சிறந்தவர் ஷீபா. ஏராளமான பாடப்பிரிவுகளில் பட்டம் வாங்கியுள்ள அவர், 11 மொழிகளில் வல்லவரும் கூட. இதன் காரணமாக பல்வேறு மொழிகளில் 45 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். தான் படித்த படிப்பின் மூலம் சொந்த காலில் நின்று, இன்று சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் செயல் அதிகாரியாக உள்ளார். மேலும், உலக அளவில் தலைசிறந்து விளங்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

4 கோடி உதவி

இவருக்கு அண்மையில் யுனெஸ்காவின் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் நிறுவனம், நிலையான சூழலுக்கான கிரியேட்டிவ் இன்ஜினியர்ஸ் என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச சிறந்த பெண் பொறியாளர் என்ற விருதை வழங்கி கவுரவித்தது. இவ்வாறு ஐ.டி. துறையில் கடந்த சில ஆண்டுகளாக தான் சம்பாதித்த ரூ. 4 கோடிக்கும் அதிகமான பணத்தை ஏழை மக்களின் நலனுக்காக வழங்கியுள்ளார் ஷீபா லூர்தஸ்.

அக்னி சிறகு நாயகன் அப்துல் கலாமின் பரம பக்தையான ஷீபா, கலாம் அய்யாவின் கனவை நினைவாக்கும் வகையில், “யுனைடெட் சாமரிடன்ஸ் இந்தியா” என்ற அறக்கட்டளையை தொடங்கி அதன் சர்வதேச தலைவராகவும் இருந்து வருகிறார். அந்த அறக்கட்டளையின் மூலம் ஏராளமான குழந்தைகைள படிக்கவைத்து வருவதுடன், சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ள பெண்களுக்கும், உடல்நலம் குன்றியவர்களுக்கும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

பத்திரிக்கையாளர்களுக்கு உதவி

பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு உதவுவதை தனது முதற்க்கண் பணியாக செய்துவரும் ஷீபா அவர்கள், நலிந்த பத்திரிக்கையாளர்களுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் மறைந்த மூத்த பத்திரிகையாளர் அமரர்.ஜுபிடர் ரவி அவர்களின் படத்திறப்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட ஷீபா அவர்கள் தன்னால் முடிந்த பொருளாதார உதவியை பாதிக்கப்பட ரவி அவர்களின் குடும்பத்துக்கு வழங்கினார்.

“யுனைடெட் சாமரிடன்ஸ் இந்தியா” அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது

10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டு மரக்கன்றுகளை நட்டுவரும் டாக்டர் ஷீபா, தனது வாழ்க்கையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். சென்னையில் ஒரே இடத்தில் 2 ஆயிரத்து 500 பேரை ஒன்றுதிரட்டி, கண் தானம் செய்ய வைத்து தெற்காசியாவில் சாதனை நிகழ்த்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லை ஆய்வுக் கட்டுப்பாட்டிலிருக்கும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவளித்து வருகிறார்.

அகவை நாற்பதைக் கூட தொடாத ஷீபா, இதுவரை 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றியுள்ளார். 2 சர்வதேச நோபல் குடிமகன் விருதுகளையும் வென்றுள்ளார். சமூக தொண்டே தன் தலையாய கடமை என்று வாழ்ந்துவரும் ஷீபா, திருமணம் செய்திருந்தால் கருவுற்று, இந்நேரம் ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருப்பார். ஆனால் அன்னை தெரசாவைப்போல கருணை உற்றதால் மனதால் ஏராளமான குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்து வருகிறார். மேலும் 4 குழந்தைகளை தனி ஒருத்தியாக தத்தெடுத்து, அவர்களுக்கு படிப்பளித்து, அதில் மூவருக்கு திருமணமும் செய்துவைத்துள்ளார். இத்தனை தொண்டுகளையும் ஷீபா, யாரிடமும் எவ்வித நன்கொடையும் பெறாமல், தனது சொந்த பணத்தில் செய்துள்ளார் என்பதுதான் ஆகச்சிறப்பு.

கல்வி, பரத நாட்டியம், பேச்சு, எழுத்து, கவிதை, இலக்கியம், பத்திரிகை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தொழில்நுட்பம், சமூகசேவை என அனைத்திலும் ஓய்வின்றி சுழன்று கொண்டிருப்பதற்கு பின்னால் தன் தாய், தந்தை உள்ளனர் என்று கூறும் ஷீபா லூர்தஸ், ஆச்சர்யங்களின் அணிவகுப்பு என்றே சொல்லலாம்.

Previous Post

நிக்கோடினுக்கு அடிமையான 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள்..

Next Post

அராஜகத்தில் ஆட்டம் போடும் அமெரிக்கா.? இஸ்ரேல் தாக்குதலை விமர்சித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த அவலம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அராஜகத்தில் ஆட்டம் போடும் அமெரிக்கா.? இஸ்ரேல் தாக்குதலை விமர்சித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த அவலம்..

அராஜகத்தில் ஆட்டம் போடும் அமெரிக்கா.? இஸ்ரேல் தாக்குதலை விமர்சித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த அவலம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    டாக்டர் ஷீபா அவர்களின் பொது நலத் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் அவரது பொது நல தொண்டை வரவேற்கிறேன் மறைந்த பத்திரிகையாளர் ஜுபிடர் ரவி அவர்களின் குடும்பத்திற்கு பொருளாதார உதவி செய்யும் போது நானும் அங்கே இருந்தேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In