பெங்களூரு: கர்நாடகத்தில் நடைபெற்றும் காங்கிரஸ் அரசை சீர்குலைப்பதற்காக கேரளாவில் உள்ள “தந்திரிகள்” மூலம் தனக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் எதிராக மாந்திரீகம் செய்யப்பட்டுள்ளதாக கா்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாா் வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”என்னையும், முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில அரசையும் குறிவைத்து, கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் விலங்குகளை பலியிடும் “சத்ரு பைரவி யாகம்” என்ற சடங்கு நடத்தப்படுள்ளது.
கர்நாடத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை சீர்குலைப்பதற்காக கேரளாவில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் மாந்திரீகம் செய்யப்பட்டு உள்ளது. ‘ராஜகண்டக’, ‘மரண மோகன ஸ்தம்பன’ யாகங்களை நடத்தியுள்ளார்கள். இது தொடர்பான நம்பத்தகுந்த தகவல் தன்னிடம் இருப்பதாகவும், கேரளாவில் நடத்தப்படும் மாந்திரீக சடங்குகளுக்கு, யாகங்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் அது குறித்த தகவல்களை அளித்திருப்பதாக சிவக்குமார் கூறினார்.


😄😄😄😄 கமெண்ட் செய்ய விரும்பவில்லை 😄😄😄