மதுரை செல்லூர் கிழத் தோப்பில் அமைந்திருக்கும் அருள்மிகு “ஸ்ரீ முத்துமாரியம்மன்” திருக்கோயிலில் 89-வது ஆண்டு பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியான புதன்கிழமை, பொங்கல் பானை ஊர்வலம் கோரிப்பாளையம் தேவர் சிலையை சுற்றி கோவிலுக்கு வந்தடையும். இரண்டாம் நாளான வியாழக்கிழமை, பக்த கோடி பொதுமக்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சி சந்தோஷ்பாண்டி தலைமையில் நடைபெற்றது. உடன் செல்லப்பாண்டி, யுவராஜ், அருண் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



ஓம் சக்தி ஆதிபராசக்தி