தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின், இந்தியாவில் மொழிகள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தியைத் திணிக்கும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்போம் என்றும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இந்தியில் அறிக்கை வெளியிட்டத்தைத் தொடர்ந்து ஸ்டாலினிடமிருந்து இத்தகைய எதிர்ப்பு வந்திருக்கிறது.
இது குறித்து ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு குடிமகனும் பங்களிக்கின்றனர். ஆனால் மத்திய அரசும் அதன் நிறுவனங்களும், மற்ற இந்திய மொழிகளை விட இந்திக்கு எல்லா வழிகளிலும் தேவையற்ற, நியாயமற்ற நன்மைகளைத் தொடர்ந்து அளித்து வருகின்றன. மக்களின் நலனில் கவனம் செலுத்தாமல், இந்தியைத் திணிப்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர்.

