Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கேட்டது கிடைக்கும்! – புதுக்கோட்டை பைரவர் கோவிலுக்கு புறப்பட்ட அமித்ஷா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 30, 2024
in Default
1
தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கேட்டது கிடைக்கும்! – புதுக்கோட்டை பைரவர் கோவிலுக்கு புறப்பட்ட அமித்ஷா!
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இன்றுடன் மக்களவை தேர்தல் கடைசி கட்ட பிரச்சாரமும் முடிவடையும் நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று புதுக்கோட்டை வருகிறார்.

பல கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரங்களை நிறைவு செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.

அதேசமயம் பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில் பாஜக பிரபலங்கள் பலரும் நாட்டில் உள்ள முக்கியமான பல கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய தொடங்கியுள்ளனர். முக்கியமாக தமிழ்நாடு பெரிதும் கவனத்திற்கு உரியதாக ஆகியுள்ளது. பிரதமர் மோடி கன்னியாக்குமரியில் தங்கியிருந்து 3 நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார்.

இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியகிரீஸ்வரர் சிவ ஸ்தலமும், சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் மிகவும் புகழ்பெற்றவை ஆகும். இந்த கோவிலின் அருகே கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான  காலபைரவர் வீற்றிருக்கிறார். இந்த காலைபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமிநாளில் வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில் இன்று தேய்பிறை அஷ்டமி நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சிக்கு விமானம் மூலமாக வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காலபைரவர் கோவிலுக்கு செல்கிறார். அங்கிருந்து திரும்பிய பின் திருப்பதிக்கு செல்கிறார். அமித்ஷா வருகையினால் திருமயம் தீவிர போலீஸ் கண்காணிப்பில் உள்ளது.

Previous Post

காங்கிரஸுடன் நிரந்தர கூட்டணி என்று இல்லை..! பாஜகவை முடிவுக்கு கொண்டுவருவதே எங்கள் முதல் இலக்கு, – அரவிந்த் கெஜ்ரிவால் தடாலடி….

Next Post

”1982 ல படம் வரலன்னா காந்தியை யாருக்கும் தெரியாது” – மோடி : அப்ப கோட்சேக்கு எப்படி தெரிஞ்சுச்சி..? குவியும் கண்டனங்கள்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”1982 ல படம் வரலன்னா காந்தியை யாருக்கும் தெரியாது” – மோடி : அப்ப கோட்சேக்கு எப்படி தெரிஞ்சுச்சி..? குவியும் கண்டனங்கள்..

”1982 ல படம் வரலன்னா காந்தியை யாருக்கும் தெரியாது” - மோடி : அப்ப கோட்சேக்கு எப்படி தெரிஞ்சுச்சி..? குவியும் கண்டனங்கள்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் சரி தெய்வத்திடம் வந்தே தீர வேண்டும் இதற்கு அமித்ஷா ஒரு உதாரணம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In