‘எனக்கு எதிராக சதி’
குற்றம் சாட்டப்பட்டவர் வெளியிட்ட வீடியோவில், தனது வெளிநாட்டு பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், ஒரு மாதத்திற்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே குற்றச்சாட்டுகளைப் பற்றி அறிந்ததாகவும் அவர் கூறினார். பிரஜ்வல் ரேவண்ணா கூறுகையில், “ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு எதிராக வதந்திகளை பரப்பிய பிறகு, நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன், நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது வாழ்க்கையை முடிக்க ஒரு அரசியல் சதி நடக்கிறது, அதை நான் எதிர்கொள்வேன்” என்று பிரஜ்வால் மேலும் கூறினார்.
