Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமைதி திரும்புமா? – ஓர் ஆண்டு நிறைவு செய்த மணிப்பூர் கலவரம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2024
in அரசியல் செய்திகள்
0
அமைதி திரும்புமா? – ஓர் ஆண்டு நிறைவு செய்த மணிப்பூர் கலவரம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூக மக்களுக்கு இடையே கடந்த 2023 ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி வெடித்த கலவரம் இன்றளவும் கனன்று கொண்டிருக்கிறது.

மணிப்பூர் மக்கள்தொகையில் 51 சதவீதமாக இருப்பவர்கள் மெய்தி இன மக்கள். தலைநகர் இம்பால் சமவெளிப்பகுதிகளில் வசிக்கும் இந்த மெய்தி மக்ககளில் பெரும்பான்மையினர் இந்து மதத்தவர். குறைந்த அளவிலானோர் கிறிஸ்தவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் உள்ளனர். அதேசமயத்தில் மலைப்பிரதேசங்களில் வசிக்கும் குக்கி சமூக மக்கள் பழங்குடியினர். இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.

விளம்பரம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான மெய்தி மக்கள், தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என கேட்டு வருகின்றனர். அதற்கு குக்கி சமூக மக்கள் தங்களது சலுகைகளும், நிலங்களும், வேலைவாய்ப்பும் பறிபோகும் என்ற அச்சத்தில் எதிர்த்து வருகின்றனர்.

இதையும் படிக்க:
செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் – பரிதாபமாக உயிரிழந்த தாயும், சேயும்

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் மெய்தி மக்களுக்கு ஆதரவாக மணிப்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 2023 ஏப்ரலில் அதன் இணையதளத்தில் வெளியானபோது குக்கி இன மக்கள் அதிர்ந்தனர். அதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மே மாதம் மெய்தி சமூக மக்களுக்கும், குக்கி சமூகத்தவருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக பரவியது.

விளம்பரம்

ஆயுதமேந்திய குழுக்கள் வீடு புகுந்து மக்களைக் கடத்திச் சென்று மாறி மாறி துடிதுடிக்கக் கொன்றனர். ரத்த சொந்தங்களை இழந்த பல குடும்பங்களின் கூக்குரல்கள் காற்றில் கரைந்தன.

மெய்தி – குக்கி ஆயுதக்குழுக்களிடையிலான கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். பல ஆயிரம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வெளியேறினர். பல குடும்பத் தலைவர்களும், இளைஞர்களும் உயிருக்கு அஞ்சி வேறு இடங்களில் வேதனையுடன் இன்றும் காலம் கழித்து வருகின்றனர்.

மணிப்பூரில் ராணுவம், துணை ராணுவமும் குவிக்கப்பட்டிருந்தாலும் வன்முறை குறையவில்லை. இந்த வன்முறையில் இதுவரை 221 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தங்கள் சமூகத்தைச் சேர்ந்த 32 பேரைக் காணவில்லை என மெய்தி சமூகத்தவரும், 15பேரைக் காணவில்லை என குக்கி சமூகத்தவரும் கூறி வருகின்றனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
பாம்பு கடித்த இளைஞரை கங்கை நதியில் கட்டி தொங்கவிடப்பட்ட அவலம்..

இந்த கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் காவல்நிலையங்களில் 11,000 FIR-கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த சில மாதங்களாக வன்முறை சற்று தணிந்திருந்தாலும், நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த இப்பிரச்சனை மக்களவைத் தேர்தலின் போது நிகழ்ந்த சில உயிரிழப்புகள் அமைதியை விரும்பும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே மணிப்பூர் வன்முறை வெடித்து மே 3 உடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், வன்முறை தொடர்பான எப்ஐஆர்-களின் எண்ணிக்கை திடீரென 11,000 இருந்து 3000 குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

கலவரத்தின் தீவிரத்தை குறைத்துக் காட்டுவதற்காக எப்ஐஆர்-களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் இதற்கு போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கலவரம் உச்சத்தில் இருந்தபோது ஒரே வழக்கு தொடர்பாக அருகருகே உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அது தற்போது சரிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இதுபோல் காவல்நிலையங்களில் எல்லை விவரம் பார்க்காமல் பதிவு செய்யப்படும் ZERO F.I.R-கள் உரிய காவல்நிலையங்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டதாலும், FIR-களின் எண்ணிக்கை பாதிக்கும் அதிகமாக குறைந்ததாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எப்ஐஆர்-கள் குறைந்தாலும் மக்களின் மனங்களில் வடுக்கள் ரணமாகவே உள்ளன.

விளம்பரம்

மணிப்பூரில் அமைதி திரும்பி, அங்கிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் சொந்தமண்ணுக்கு திரும்பி அச்சமின்றி இணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

 செய்தியாளர் : எஸ்.சசிதரன்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



.

Previous Post

பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: 50 தமிழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

Next Post

HBD Vinayak Damodar Savarkar: சமூக சீர்திருத்தவாதி, அரசியல்வாதி மற்றும் சிந்தனையாளர் சாவர்க்கர் பிறந்த நாள் இன்று

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
HBD Vinayak Damodar Savarkar: சமூக சீர்திருத்தவாதி, அரசியல்வாதி மற்றும் சிந்தனையாளர் சாவர்க்கர் பிறந்த நாள் இன்று

HBD Vinayak Damodar Savarkar: சமூக சீர்திருத்தவாதி, அரசியல்வாதி மற்றும் சிந்தனையாளர் சாவர்க்கர் பிறந்த நாள் இன்று

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In