கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என வீடியோ வெளியிட்டுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பல பெண்களை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி, அதை வீடியோவாக எடுத்ததாக பிரஜ்வல் மீது குற்றம்சாட்டப்பட்டுகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாட்டுக்கு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை, இந்தியாவுக்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க:
திடீரென சரிந்து விழுந்த மேடை… அதிர்ந்த ராகுல்காந்தி… பீகாரில் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு!
இப்படியான சூழலில் தற்போது வீடியோ வெளியிட்டு தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், வரும் மே 31ஆம் தேதி நேரில் ஆஜராகுவதாகவும் பிரஜ்வல் வீடியோ வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.
#WATCH | In a self-made video, JDS MP Prajwal Revanna says, “I will appear before SIT on 31 May.”
He said, “…When elections were held on 26th April, there was no case against me and no SIT was formed, my foreign trip was pre-planned. I came to know about the allegations while… pic.twitter.com/7Rt5b0Opi4
— ANI (@ANI) May 27, 2024
தான் முன்பே திட்டமிருந்தபடிதான் வெளிநாடு சென்றுள்ளதாகவும், தற்போது தான் தன் மீதான பாலியல் குற்றசாட்டுகளை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். தன் மீது அரசியல் கட்சியினர் அவதூறு பரப்புவதாகவும், இத்தனை நாட்கள் இதுகுறித்து விளக்கம் அளிக்காமல் இருந்தததற்கு கட்சியினருக்கும், பொதுமக்களுக்களிடத்திலும் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டுள்ளார்.
.
