மதுரை மாவட்டம் திருநகர் அருகே சீனிவாசா நகரில் உள்ள 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயிலில், உலக நன்மை வேண்டியும் , 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை ஒட்டி நடைபெறும் விளக்கு பூஜையில் 158 பெண் பக்தர்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது .
இந்த விளக்கு பூஜையில், குழந்தை வரம் வேண்டியும், மாங்கல்யம் நிலைக்கவும் , திருமண பாக்கியம் வேண்டியும், கல்வி செல்வம் வேண்டியும் பெண் பக்தர்கள் வேண்டிக்கொண்டு அகல் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திருக்கோவில் சார்பில்அகல் விளக்கு , எண்ணெய், மாங்கல்யம் , பழம், பத்தி, பிரசாதம் உள்ளிட்ட 10 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன.
