Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2024
in அரசியல் செய்திகள்
0
அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் இப்போதெல்லாம் கொண்டாடப்படுவதாகவும், ஊடகங்களால் பேட்டி எடுக்கப்படுவதாகவும், அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் மோடி மறைமுகமாக சாடியுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 40 நாட்கள் சிறையில் இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீனில் வெளிவந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தான் கைது செய்யப்பட்டது ஒரு சதி என்றும், தேர்தலின் தங்களது கூட்டணி வெற்றிபெற்றால், தான் மீண்டும் சிறை செல்லத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரை குறிப்பிடாமல், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஒருவர், ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

விளம்பரம்

நியூஸ் 18 குழுமத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும் கசப்பானவை என்றும், அது கடுமையான கருத்துகளை தெரிவித்து இருப்பதாகவும் தெரிவித்தார். பிற ஊடகங்கள் மற்றும் பாஜக செய்தி தொடர்பாளர் கூறியதை கூட விட்டுவிட்டு, நீதிமன்றங்களின் கருத்தை கவனித்தால் அனைவருக்கும் புரியும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும், பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் ஏமாற்றி மாட்டிக் கொண்டால், அவரை ஒரு மாதம் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்வார்கள். அப்போது, அவரது பெற்றோர் வெட்கப்படுவார்கள், இது போன்ற விஷயங்கள் சமூகத்தில் தவறாகவே கருதப்படுகின்றன என்று கூறிய பிரதமர் மோடி, பொதுவாழ்வில் இருப்பவர்கள் எந்த பொறுப்பும் இல்லாமல் பேசுவது கவலை அளிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

அத்துடன், தற்போது கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் கொண்டாடப்படுகிறார்கள் என்றும், ஊடகங்களால் அத்தகைய நபர்கள் நேர்காணல் செய்யப்படும்போது மகிமைப்படுத்தப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், ஒரு தனி மனிதனை பற்றி தான் கவலைப்படவில்லை என்றும், ஒட்டுமொத்த சமூக சீரழிவு பற்றியே கவலைப்படுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முன்பு ஒருமுறை சார்லஸ் சோப்ராஜ் என்ற கிரிமினல் குற்றவாளி இது போன்று ஊடகங்களால் பேட்டி எடுக்கப்பட்டதாகவும், அதைப் போன்று தற்போது ஊழல் அரசியல்வாதிகளும் பேட்டி எடுக்கப்படுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது தனக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

விளம்பரம்

.



.

Previous Post

Narendra Modi On OBC: நான் உயிருடன் இருக்கும் வரை இதை செய்ய விடமாட்டேன்! சத்தியம் செய்த மோடி? எது தெரியுமா?

Next Post

’விளக்கு பிடித்து தேடினாலும் இது போல் தலைவர் கிடைக்க மாட்டார்!’ அமித் ஷா பாராட்டிய இளம் தலைவர் யார் தெரியுமா?-pakistanoccupied kashmir is ours and we will take it amit shah

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’விளக்கு பிடித்து தேடினாலும் இது போல் தலைவர் கிடைக்க மாட்டார்!’ அமித் ஷா பாராட்டிய இளம் தலைவர் யார் தெரியுமா?-pakistanoccupied kashmir is ours and we will take it amit shah

’விளக்கு பிடித்து தேடினாலும் இது போல் தலைவர் கிடைக்க மாட்டார்!’ அமித் ஷா பாராட்டிய இளம் தலைவர் யார் தெரியுமா?-pakistanoccupied kashmir is ours and we will take it amit shah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In