காவல்துறை வாகனத்தில் மருத்துவமனை வார்டுக்குள் புகுந்து மருத்துவர் ஒருவரை உத்தரகாண்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.
ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவருக்கு ஆப்ரேஷன் தியேட்டரில் நர்சிங் அலுவலராகப் பணியாற்றும் சதீஷ் குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
சதீஷ்குமார் மீது அந்த பெண் மருத்துவர் புகார் அளித்த நிலையில், துரிதமாக செயல்பட்ட மாநில காவல்துறையினர் சற்றும் தாமதிக்காமல் அவரை பிடிக்க, காவல்துறை வாகனத்தில், மருத்துவமனை எமெர்ஜன்சி வார்டுக்குள் புகுந்தனர்.
இதையும் படிக்க:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
காவலர்கள் வருவதை பார்த்ததும் மருத்துவமனையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் வாகனத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். விரைந்து சென்ற காவலர்கள், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சதீஷ்குமாரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். இந்தக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் குமார் மேலும் பல பெண் மருத்துவர்களுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சதீஷ்குமாரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் இந்த கைது நடிவடிக்கை ஒருபுறம் பாராட்டை பெற்றாலும், மறுபுறம் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. என்னதான் குற்றவாளியை பிடிப்பதாக இருந்தாலும் இப்படியா பண்ணுவீங்க ஆபிசர்ஸ் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
.
