ஏற்கெனவே தி.மு.க அமைச்சர்களையும், நடிகர் விஜய்யையும் பாராட்டி பேசியது எடப்பாடி பழனிசாமிக்கு எரிச்சலை ஏற்படுத்திய நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டதற்கு எதிராக அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிட்டுள்ள நிலையில், போட்டிக் கட்சியின் தலைவரை புகழ்ந்து பதிவிட்டது, அதிமுக தலைமையை மேலும் கோபம் கொள்ள வைத்துள்ளது.

“மத்தியில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ராகுல் காந்தி பிரதமராவார் என்று கணித்து, எதற்கும் இருக்கட்டும் என்று முன்கூட்டியே துண்டு போடுகிறார்” என்று திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் பேசி வருகிறார்கள்.
இது குறித்து செல்லூர் ராஜூ தரப்பில் விசாரித்தபோது, “ராகுலின் எளிமைக்காக சாதாரணமாக போட்ட பதிவுதான், வேறு ஒன்றுமில்லை” என்று தெரிவிக்கிறார்கள்.
ஆனால், செல்லூராரின் பதிவு கட்சிக்குள் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
