கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தது திட்டம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 6 கோடிக்கும் மேலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தினசரி ஊதியம் தற்போது ரூ.290ஆக உள்ள நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.319ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இதற்காக ரூ.1,129 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. ஊரக வேலை உறுதி திட்ட ஊதியம் உயர்த்தப்படு என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கமெண்ட் செய்ய விரும்பவில்லை