Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் ராகுல்-அகிலேஷ் வெளிநாட்டுக்கு பறந்திருப்பார்கள்… மீண்டும் சீண்டிய மோடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 17, 2024
in Default
0
தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் ராகுல்-அகிலேஷ் வெளிநாட்டுக்கு பறந்திருப்பார்கள்… மீண்டும் சீண்டிய மோடி!
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

‘மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில், தங்கள் தோல்வியைத் தாங்காது ராகுல் காந்தி – அகிலேஷ் யாதவ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பறந்திருப்பார்கள்’ என்று ஆருடம் பகிர்ந்திருக்கிறார் பிரதமர் மோடி.

பாஜகவின் வாக்கு வங்கி அதிகமுள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, அங்கே பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சியினரை தீவிரமாக தாக்கி வருகிறார். அதனூடே அக்கட்சியின் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் மோடி சீண்டி வருகிறார்.

இந்த வகையில் இன்றைய தினம் ஃபதேபூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மோடி, ராகுல் – அகிலேஷ் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து தனக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ”காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் கனவுகள் கலைந்துவிட்டன. இப்போது அவர்கள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4-க்கு பிந்தைய திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். தோல்விக்கு யார் காரணம் என்று பரஸ்பரம் குற்றம்சாட்டவும் தயாராக இருக்கிறார்கள். எனக்கு கிடைத்த தகவலின்படி வெளிநாட்டு பயணத்துக்கான அவர்களின் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று மோடி போட்டுத் தாக்கியுள்ளார்.

உபி எதிர்க்கட்சிகள் மீதான தனது தாக்குதலைத் தொடர்ந்த மோடி, காங்கிரசுக்கு உபியில் இருப்பு இல்லை என்றும் கூறினார். ”சமாஜ்வாதி – காங்கிரஸ் இரண்டும் அதிகார குடும்பத்துக்கான அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகின்றன. இருவரும் ஊழலுக்காக மட்டுமே அரசியலில் உள்ளனர். இருவரும் தங்கள் வாக்கு வங்கியை திருப்திப்படுத்தவும், குற்றவாளிகளை ஊக்குவிக்கவும் எதையும் செய்வார்கள். இரு கட்சிகளும் மாஃபியாக்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் காட்டுபவை” என்று சாடினார்.

ஃபதேபூர் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி உள்ளிட்டோர்

ஃபதேபூர் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி உள்ளிட்டோர்

மேலும் அவர் பேசும்போது, “மாஃபியாக்கள் மீதான சமாஜ்வாதியின் காதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அவர்களின் கட்சித் தலைவர் மாஃபியாக்களின் கல்லறையில் ‘ஃபாத்தியா’ வாசிக்கிறார். அவர்கள் எங்களுக்கு எதிராக ‘காவி பயங்கரவாதம்’ என்ற பொய்யான கதையை நெய்துள்ளனர். ஆனபோதும் இங்கே அவர்களின் தோல்வி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது” என்று முடித்துள்ளார் மோடி.

கடந்த தேர்தலில் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வென்ற வகையில் உபி-யில் பரிதாபகரமான நிலையில் காங்கிரஸ் இருந்தது. அமேதியில் கடந்த முறை தோற்ற ராகுல் காந்தியும் இம்முறை வயநாட்டில் மட்டுமே போட்டியிட்டார். அமேதியை கடைசி வரை அவர் தவிர்த்து வந்ததில், உபி காங்கிரஸார் இம்முறை சோர்ந்து போனார்கள்.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் தற்போது சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாலும், பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்துக்கு கூடுதல் கவனம் காட்டுவதாலும் காங்கிரஸார் அங்கே உற்சாகம் கண்டுள்ளனர். இவற்றின் மத்தியில் அந்த மகிழ்ச்சியை காணடிக்கும் நோக்கோடு பிரதமர் மோடி அங்கே தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

Previous Post

இந்திய எல்லையில் சீனா மாதிரி கிராமங்கள் அமைப்பது எங்களால் அல்ல, நேரு தான் காரணம்; வெளியுறவுத்துறை அமைச்சர் சர்ச்சை பதில்..

Next Post

24% மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம்… எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
24% மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம்… எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்!

24% மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம்... எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In