2A வழித்தடத்தில் டிக்கெட் வாங்காத பயணிக்கு MTC டிக்கெட் பரிசோதகர்கள் அபராதம் விதித்தனர், ஆனால் NEWS 7 செய்தி ஊடகம் இந்த செய்தியை வேறு மாதிரியாக வெளியிட்டது. பயணி இறங்க வேண்டிய ஸ்டாப்பில் பேருந்து நிற்காமல் சென்றது என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த MTC நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ X கணக்கு வழியாக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கீழ்கண்டவாறு கூறியுள்ளதாவது… மேலும் பொய் செய்தி வெளியிட்ட NEWS 7 செய்தி ஊடக நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
10.05.2024 அன்று மாலை 3:20 மணி அளவில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் 2A வழித்தடத்தில் D1 திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் பயணச்சீட்டு பரிசோதனைகள் குறித்து
NEWS 7 செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள காணொளி பற்றிய விவரம்: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 2A வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகள் சிந்தாதிரிப்பேட்டை பேருந்து நிறுத்தத்திற்கு செல்லாது. இச்சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயணி வண்டி எண் VYJ 1154-ல் சிம்சன் (ஓமந்தூரார் மருத்துவமனை) பேருந்து நிறுத்தத்திற்கு பயணச்சீட்டு பெற்றுவிட்டு குறிப்பிட்டுள்ள பேருந்து நிலையத்தில் இறங்கவில்லை. தொடர்ந்து, பயணி D1 திருவல்லிக்கேணி காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது பயணச்சீட்டு பரிசோதகர் பரிசோதத்ததில் பயணி ஓவர் ரைடிங் செய்தது தெரியவந்தது எனவே அதற்கான அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், பயணி தாம் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் பேருந்து நிற்கவில்லை என்று குற்றம் சாடியுள்ளார்.
இதனை NEWS 7 செய்தி மாநகர் போக்குவரத்துக் கழகத்திடம் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல் செய்தியை பதிவிட்டுள்ளது. 10.05.2024 மாலை 03.20 மணி அளவில் சிம்சன் (ஓமந்தூரார் மருத்துவமனை) பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றதற்கான சிசிடிவி காணொளி பதிவு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இதுபோன்ற பரிசோதனைகள் அவ்வப்போது நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நடவடிக்கை, பயணச்சீட்டு மற்றும் பஸ் பாஸ் இல்லாமல் பயணிக்கும் நபர்களை அடையாளம் காண போக்குவரத்து துறைக்கு உதவுவது மட்டுமல்லாமல், போக்குவரத்து சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிமுறைகளை பயணிகள் கடைபிடிக்க நினைவூட்டுகிறது. உங்கள் ஒத்துழைப்பு அனைவருக்கும் ஒரு சுமூகமான பயணத்தை உறுதி செய்கிறது. மேலும்,
NEWS 7 செய்தி ஊடகம் மாநகரப் போக்குவரத்து கழகத்திடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளாமல் தாமாகவே செய்தியை பதிவிட்டுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுகுறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
