Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர்… கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 17, 2024
in அரசியல் செய்திகள்
0
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர்… கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!
11
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

காதலை ஏற்க மறுத்ததால், 20 வயது இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே வீராப்புரா ஓனி பகுதியை சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண் அஞ்சலி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளித் தோழன் விஸ்வா என்ற கிரிஷ் சாவந்த் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால், அஞ்சலியை ஒரு தலையாக காதலித்த விஸ்வா தனது காதலை ஏற்கும்படி கூறியுள்ளார்.

விஸ்வா வேலைக்கு போகாமல், அடிக்கடி திருட்டு வழக்குகளில் கைதாவதால், அவரது காதலை ஏற்க மறுத்த அஞ்சலி, நட்புடன் தான் பழகி வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விஸ்வா, தன்னை காதலிக்காவிட்டால், இதே பகுதியில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ஒருதலை காதலால் கொலை செய்யப்பட்ட நேஹாவைப் போல கொலை செய்துவிடுவதாக மிரட்டிச் சென்றுள்ளார்.

அதன்பிறகு அஞ்சலி அவரது காதலை ஏற்க மறுத்தநிலையில், இன்று அதிகாலை அஞ்சலியின் வீட்டிற்குள் நுழைந்த விஸ்வா, அவரது வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால், அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த அஞ்சலியை மீண்டும் வீட்டிற்குள் இழுத்துச் சென்று பலமுறை கத்தியால் குத்தியதில், அஞ்சலி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது பாட்டியும், இரண்டு சகோதரிகளும் கூச்சலிட்டதால், விஸ்வா அங்கிருந்து தப்பியோடினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அஞ்சலியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய விஸ்வா எங்கு தலைமறைவாகி இருக்கிறார் என்றும் தேடி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இதே ஹூப்ளியில் கல்லூரி வளாகத்தில் வைத்து, ஒருதலைக் காதல் விவகாரத்தில் நேஹா என்ற இளம்பெண்ணை, பயாஸ் என்ற மாணவர் குத்திக் கொலை செய்தார். அதேபோன்று கொன்று விடுவதாக கூறி மிரட்டிய விஸ்வா, தற்போது கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

.

Previous Post

நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்யக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு..

Next Post

”பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்”- அமித் ஷா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்”- அமித் ஷா

”பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்”- அமித் ஷா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In