Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்யக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 16, 2024 - Updated on May 17, 2024
in அரசியல் செய்திகள்
0
நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்யக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு..
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்யக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் பிணையில் விடுவிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் மற்றும் உஜ்ஜல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் பல்வேறு கட்ட வாதங்கள் நிறைவடைந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்த்துவிட்டு, அமலாக்கத்துறை தன்னிச்சையாக யாரையும் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய விரும்பினால், அது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதன் பிறகு, வழக்கின் தன்மையை பொறுத்து சிறப்பு நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சம்மன் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் நபர் பிணைக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம், சிறப்பு நீதிமன்றம் விரும்பினால், இந்திய குற்றவியல் சட்டப்பிரிவின்படி, அவரை பிணையில் விடுவிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. சம்மன் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜராகும் நபருக்கு பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் உள்ள பிணைக்கான நிபந்தனைகள் பொருந்தாது என்றும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

.

Previous Post

’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Next Post

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர்… கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர்… கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர்... கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In