தற்போது பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கும் ‘south will surprise’ என்ற சொல்லாடலை, கடந்த ஜனவரி மாதம் கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை பயன்படுத்தியிருக்கிறார். அதாவது, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, “நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராகப் பார்ப்பதற்கு ஒட்டுமொத்த நாடும் ஆசைப்படுகிறது. தென் இந்தியாவில் ஆச்சர்யம் தரக்கூடிய தேர்தல் முடிவுகள் வரப்போகின்றன. கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச இடங்களை பா.ஜ.க கைப்பற்றும்” என்றிருக்கிறார்.

மேலும், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடிக்கு ஆதரவான அலை வீசுகிறது. கர்நாடகாவில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெறும்” என்றார் பசவராஜ் பொம்மை. தென் மாநிலங்களில் மொத்தம் 130 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. 2019 மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் மொத்தம் 303 தொகுதிகளில் ஜெயித்த பா.ஜ.க., தென் மாநிலங்களில் வெறும் 29 தொகுதிகளிலேயே வெற்றிபெற்றது. அதிலும் கர்நாடகாவில் மட்டும் 25 தொகுதிகள் கிடைத்தது. கர்நாடகாவை தவிர்த்து 4 இடங்களில் தான் தென்னிந்தியாவில் பாஜக-வால் வெல்ல முடிந்தது.
400 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் என்று பிரதமர் மோடி சொல்லும் கணக்குப்படி பார்த்தால், தென் மாநிலங்களில் 70 தொகுதிகளுக்கு மேலாவது ஜெயிக்க வேண்டும். மோடி சொல்வது சரியான கணிப்பு தானா, அல்லது தேர்தல் கால பேச்சா என்பதெல்லாம் ஜூன் 4-ல் தான் பதில் தெரியும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
