Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நோயாளிகளின் உயிரோடு விளையாடும் மருத்துவகல்லூரி மருத்துவர்கள்? அரியலூரில் பொமக்கள் சாலை மறியல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 15, 2024
in Default
0
நோயாளிகளின் உயிரோடு விளையாடும் மருத்துவகல்லூரி மருத்துவர்கள்? அரியலூரில் பொமக்கள் சாலை மறியல்
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர்  ரமேஷ். நேற்று முன்தினம் அதிகாலையில் மது போதையில் இயக்கப்பட்ட லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரமேஷ் வீட்டின் சுவற்றை உடைத்து உள்ளே சென்றுள்ளது. லாரி புகுந்ததில், வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த ரமேஷின் மனைவி அம்பிகா, அவரது குழந்தைகளான ராஜேஷ், ரம்யா, சுபாஷ் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். 

இவர்கள் நான்கு பேரும்  சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் ரமேஷின் வீடு முற்றிலும் சேதம் அடைந்ததோடு, வீட்டிலிருந்த பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முற்றிலும் சேதம் அடைந்தன. விபத்து தொடர்பாக அரியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தைகளை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக உறவினர்கள் நேற்று கூறியுள்ளனர். மருத்துவமனை தரப்பில் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது என்றும், உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

நேற்று மறுத்துவிட்டு இன்று காலம் தாழ்த்தி தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் கூறியதை கண்டித்து, உறவினர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி நிர்வாகத்தில் இருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும், குழந்தைகளின் உடல்நிலையை சரியாக கவனிக்காத மருத்துவத்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கோசமிட்டனர். 

மேலும் அரியலூர் – பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தவர்களை போலீசார், சமாதானப்படுத்தி அரியலூர் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். அரியலூர் கோட்டாட்சியர்  ராமகிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில், குழந்தையை சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல ஒத்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

Previous Post

ரூ.9 லட்சம் கோடி யாருடையது? அழிந்துபோன தரவுகள், மன்னிப்புக் கோரிய சிஇஓ!

Next Post

இந்தியாவை விட்டு ஓடும் இந்தியர்கள்: மொத்த தெற்கு ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்தோரில் 97% பேர் மணிப்பூர் வன்முறையால் இடம்பெயர்ந்த இந்தியர்களே..!அதிர்ச்சி அறிக்கை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவை விட்டு ஓடும் இந்தியர்கள்: மொத்த தெற்கு ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்தோரில் 97% பேர் மணிப்பூர் வன்முறையால் இடம்பெயர்ந்த இந்தியர்களே..!அதிர்ச்சி அறிக்கை..

இந்தியாவை விட்டு ஓடும் இந்தியர்கள்: மொத்த தெற்கு ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்தோரில் 97% பேர் மணிப்பூர் வன்முறையால் இடம்பெயர்ந்த இந்தியர்களே..!அதிர்ச்சி அறிக்கை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In