Chennai oi-Shyamsundar I
Updated: Wednesday, June 7, 2023, 13:39 [IST]
சென்னை: சூழலியல் ஆய்வாளர் சென்னை பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜி சுந்தரராஜன் காலநிலை மாற்றம் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான “கோட் ரெட்” எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்…. கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம். கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடல் கரைகள் காணாமல் போகும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்பு ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. வெப்பநிலை இனி வரும் நாட்களில் உயர உயர மேலும் மோசமான காலநிலை ஆபத்துகள், பேரிடர்கள் ஏற்படும், பனிப்பாறைகள் வேகமாக உருகும். நினைத்ததை விட காட்டுத்தீகள் வேகமாக பரவும். வெப்ப காற்று தாக்குதல்கள் இனி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது ஆர்க்டிக் கடலில் ஐஸ் உருகவும், அங்கு மின்னல் பாதிப்புகளை ஏற்படுத்தவும், பனி பாறைகள், படலங்கள் உருகவும் வழி வகுக்கும் என்று ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் சூழலியல் ஆய்வாளர் சென்னை பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜி சுந்தரராஜன் காலநிலை மாற்றம் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதான் தங்கமான அறிவிப்பு.. ஏடிஎம் போறீங்களா? இனி எல்லாம் ஈஸி.. நிதி அமைச்சர் தங்கம் போட்ட ஆர்டர் அவர் தனது போஸ்டில், ஆர்க்டிக் பெருங்கடலின் நிலை குறித்து நேச்சர் இதழில் வந்துள்ள ஆய்வு கட்டுரை அதிர்ச்சியின் உச்சம். “ஐஸ் இல்லாத ஆர்க்டிக் கோடை” என்பது 2050க்கு பிறகுதான் வரும் என்று முந்தைய ஆய்வுகள் சொல்லிவந்த நிலையில், இப்போது வந்துள்ள ஆய்வு, 2030ஆம் ஆண்டு, அதாவது இன்னும் ஆறு ஆண்டுகளுக்குள் நிகழும் என்று தெரிவித்திருப்பது உலக நாடுகளை மிகப்பெரிய கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆர்க்டிக்கில் பனி இல்லாமல் போனால் என்ன, அதிலும் கப்பல் விடலாம் என “சில அதிமேதாவிகள்” சொல்லலாம், ஆனால் கடல் வளத்தில், ஜெட்ஸ்ட்ரீம் என்று சொல்லக்கூடிய “பெருங்கடல் நீரோட்டங்களில் பெரிய தாக்கம் ஏற்படும், இந்த நீரோட்டங்கள்தான் (Ocean Currents) உலக வானிலையை தீர்மானிக்கின்றன. இந்த அறிக்கை உலக நாட்டின் தலைவர்கள் நடவடிக்கைகளை கோருகிறது. இப்போது வந்துள்ள அறிக்கை இதற்கு முந்தைய @IPCC_CH அறிக்கையை “ஒன்றுமேயில்லை” என்பது போல் எடுத்துக்காட்டுகிறது. சமீபத்தில்தான் சென்னையின் “வெட்-பல்பு” வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சென்னை பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜி சுந்தரராஜன் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் செய்துள்ள போஸ்டில், எச்சரிக்கை தகவல்: இன்று சென்னையின் “வெட்-பல்பு” வெப்பநிலை 31,3 டிகிரியை எட்டிவிட்ட்டது. பொதுவாக இது “வெப்ப அளவு” (Temperature) மற்றும் வீத ஈரப்பதம் (humidity) கொண்டு “வெட்-பல்பு” வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. “வெட்-பல்பு” வெப்பநிலை 30 டிகிரியை தாண்டினால் மிகவும் சிக்கலாகும். 32டிகிரிக்கு மேல் சென்றால் சிக்கல் கூடுதலாகும், 35 டிகிரியை தொட்டுவிட்டால் உடல் தன்னை குழுவிற்கும் தன்மையை இழந்துவிடும். இந்த பின்னணியில் “வெட்-பல்பு” நிலை 2050 வாக்கில் வரும் என்றுதான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போதே அந்த நிலையை நெருங்குவது கவலை அளிக்கக்கூடிய அம்சம்., என்று குறிப்பிட்டு இருந்தார். வெட்-பல்பு என்றால் என்ன? : வெப்பநிலையை கணக்கிட இரண்டு முறை பயன்படுத்தப்படும். ஒன்று ட்ரை பல்பு முறை. இதுதான் சாதாரண முறை. அதாவது காற்றில் உள்ள ஈரப்பதத்தை கணக்கிடாமல், அதன் பாதிப்பு இல்லாமல், வெப்பநிலை மானியை வைத்து காற்றின் வெப்பநிலையை கணக்கிடுவார்கள். அவசரச் செய்தி:-ஆர்க்டிக் பெருங்கடலின் நிலை குறித்து @Nature ல் வந்துள்ள ஆய்வு கட்டுரை அதிர்ச்சியின் உச்சம். “ஐஸ் இல்லாத ஆர்க்டிக் கோடை” என்பது 2050க்கு பிறகுதான் வரும் என்று முந்தைய ஆய்வுகள் சொல்லிவந்த நிலையில், இப்போது வந்துள்ள ஆய்வு, 2030ஆம் ஆண்டு, அதாவது இன்னும் ஆறு pic.twitter.com/LtxKPuTkMF
— G. Sundarrajan (@SundarrajanG) June 7, 2023 நாம் தினமும் கணக்கிடும் வெப்பநிலை ட்ரை பல்பு வெப்பநிலை ஆகும். இன்னொரு வெப்பநிலைதான் வெட் பல்பு வெப்பநிலை. இந்த வெட் பல்பு வெப்பநிலை என்பது ஈரமான சூழ்நிலை ஒன்றில் காற்று ஈரபதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வெப்பநிலை அளவிடப்படும். இந்த வெப்பநிலை ட்ரை வெப்பநிலையை விட குறைவாக இருக்கும். அதே சமயம் இந்த வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியஸை தாண்டினால் காற்றில் ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகம் உள்ளது என்பதை குறிக்கும். 35 டிகிரி செல்ஸியஸை தொட்டால் காற்றில் ஈரமே இல்லை என்பதை குறிக்கும். அந்த நிலையை அடைந்தால் மக்கள் அந்த சூழ்நிலையில் உயிர் வாழ முடியாத சூழ்நிலை கூட ஏற்படும்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
CODE RED: How climate change can affect the ocean current all over the world?

