சமீப காலமாக முஸ்லிம்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிகரித்து வருகிறது என்றும், அவர்களுக்கு பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் நியூஸ் 18 குழுமத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பல விவாதங்களையும் கிளப்பியது.
அதன் தொடர்ச்சியாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியூஸ் 18 குழுமத்தின் ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. மத நல்லிணக்கம் இந்தியாவில் பேணப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் அவரது மதங்களை பின்பற்றி வருகின்றனர்.
அரசியல் தளத்தை பொறுத்த அளவில் பல்வேறு பிரச்சினைகளுக்காக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. இந்த சூழலில் முஸ்லிம் மதகுரு ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நான் கண்டிக்கிறேன். இது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும். எந்த மத குருவுக்கும் எந்த கட்சிக்கும் வாக்களிக்குமாறு கூறும் உரிமை கிடையாது.
மற்ற மத குருக்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும் என்று இதுவரை கூறியுள்ளார்களா? மதத்தையும் அரசியலையும் ஒன்றாக கலக்கக்கூடாது. காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் அந்த கட்சி இராணுவத்தை விட்டு வைத்திருக்கிறது.
மும்பை தீவிரவாத தாக்குதலின் போது மும்பையை நமது பாதுகாப்பு படையினர் காப்பாற்றினர். 2008 ஆம் ஆண்டு நடந்த மோதலில் என்னுடைய நண்பர்கள் உட்பட பலர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார்கள். தற்போது முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதில் உத்தவ் தாக்கரே ஆர்வம் காட்டி வருகிறார். எங்களுடைய கொள்கைப்படி முஸ்லிம்களையும் எங்களுக்கு வாக்களிக்க கோரிக்கை வைத்துள்ளோம். சமீப காலமாக முஸ்லிம்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிகரித்து வருகிறது. அவர்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள். என்று தெரிவித்துள்ளார்.
.
