Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இலவச கல்வி… 200 யூனிட் இலவச மின்சாரம்… மக்களவை தேர்தலுக்கான கெஜ்ரிவாலின் ’10 கேரண்டி’

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2024
in அரசியல் செய்திகள்
0
இலவச கல்வி… 200 யூனிட் இலவச மின்சாரம்… மக்களவை தேர்தலுக்கான கெஜ்ரிவாலின் ’10 கேரண்டி’
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் 200 யூனிட் இலவச மின்சாரம், இலவச கல்வி உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில், தலைநகர் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

அதில், கெஜ்ரிவாலின் கேரண்டி என 10 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தனது கைது காரணமாக, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

முதல் வாக்குறுதியாக, நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்றும், ஏழை மக்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இலவச கல்வி மற்றும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் எனவும் ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்துள்ளது.

ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளிலும் டெல்லியில் உள்ளதைப் போலவே சிறு மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்றும், அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் உருவாக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து ஆக்கிரமிப்புகளை மீட்க இந்திய ராணுவத்துக்கு முழு உரிமை வழங்கப்படும் எனவும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார்.

விளம்பரம்

அக்னி வீரர்கள் திட்டத்தினை நிறுத்திவிட்டு, பணியில் சேர்ந்த அனைத்து வீரர்களையும் நிரந்தர வேலையில் முறைப்படுத்தி ஒப்பந்த முறையை ஒழிப்போம் என்றும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின் அடிப்படையில் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது உறுதி செய்யப்படும் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி வாழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான டெல்லி முழு மாநில அந்தஸ்தை ஆம் ஆத்மி அரசு வழங்கும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நாடு முழுவதும் இன்று 4ஆம் கட்டத் தேர்தல்..!

வேலைவாய்ப்பின்மையை போக்க ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், ஊழல் ஒழிப்பை உறுதி செய்வோம் எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. உற்பத்தி துறையில் சீனாவை மிஞ்சுவதை இலக்காகக் கொண்டு, பிஎம்எல்ஏ-வின் விதிமுறைகளில் இருந்து ஜிஎஸ்டி விடுவிக்கப்பட்டு எளிமையாக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

“இந்தியா” கூட்டணி வெற்றிபெற்றால், நாடு முழுவதும் இந்த 10 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இனி கெஜ்ரிவாலின் உத்தரவாதமா அல்லது மோடியின் உத்தரவாதமா என்பதை மக்களே முடிவு செய்யவேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

.



.

Previous Post

2025-ல் பறக்கும் டாக்ஸி: ஆனந்த் மஹிந்திரா நம்பிக்கை!

Next Post

தென் மாநிலங்களில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெறும்! அமித் ஷா உறுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தென் மாநிலங்களில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெறும்! அமித் ஷா உறுதி

தென் மாநிலங்களில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெறும்! அமித் ஷா உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In