Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாளை 4ஆம் கட்ட வாக்குப்பதிவு – களத்தில் இருக்கும் முக்கிய முகங்கள் யார் யார்? – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 12, 2024
in அரசியல் செய்திகள்
0
நாளை 4ஆம் கட்ட வாக்குப்பதிவு – களத்தில் இருக்கும் முக்கிய முகங்கள் யார் யார்? – News18 தமிழ்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை(13-05) நடைபெற உள்ளது. 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில், ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும் தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 13, மகாராஷ்டிராவில் 11, மேற்குவங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிகாரில் 5 தொகுதிகளிலும், ஒடிஷா மற்றும் ஜார்கண்டில் தலா 4 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலரும் தேர்தல் களத்தில் இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க : மோடி அல்ல… பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அமித்ஷா… கெஜ்ரிவால் சொன்ன காரணம் – பதிலடி கொடுத்த அமித் ஷா

ஆந்திர மாநிலத்தின் கடப்பா தொகுதியில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தனது உறவினரான ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டியை எதிர்த்து களமிறங்கியுள்ளார். ஐதராபாத் தொகுதியை, தொடர்ந்து 4 தேர்தல்களில் வென்று தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அனைத்திந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் ஓவைசி, 5ஆவது முறையாகவும் வெற்றிக்கனியை பறிக்க, பாஜக வேட்பாளரான நடிகை மாதவி லதாவுக்கு எதிராக போட்டியிடுகிறார். உத்தரப்பிரதேச மாநிலம், கன்னாஜ் மக்களவைத் தொகுதியில் 4ஆவது முறையாக களம் காணும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க பாஜக வேட்பாளர் சுப்ரத் பதக்குக்கு எதிராக வியூகம் அமைத்து பரப்புரை மேற்கொண்டார்.

மேற்குவங்க மாநிலத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மீண்டும் போட்டியிகிறார். அவர், அரச குடும்பத்தைச் சேர்ந்த 554 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறிப்பிட்டுள்ள அமிர்தா ராயை எதிர்கொள்வதால் தேர்தல் களம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதானும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் நேருக்கு நேர் மோதுவதும் கவனம் பெற்றுள்ளது.

நடிகை நதியாவின் காதல் கணவர் யார் தெரியுமா.? பலரும் அறியாத தகவல்.!


நடிகை நதியாவின் காதல் கணவர் யார் தெரியுமா.? பலரும் அறியாத தகவல்.!

பிரபல நடிகரும் பாஜகவில் இருந்து பிரிந்து திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தவருமான சத்ருகன் சின்ஹா, அசான்சோல் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அலுவாலியை எதிர்கொண்டுள்ளார். பிகார் மாநிலம், பெகுசராய் தொகுதியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அவதேஷ்குமாரை எதிர்த்து போட்டியிடும் நிலையில்,  ஜார்க்கண்ட் மாநிலம் குண்ட்டி தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், மத்திய அமைச்சருமான அர்ஜூன் முண்டா களம் கண்டுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க : தவெக தலைவர் ‘ஜோசப் விஜய்’ – Silent-ஆக செய்த சம்பவம்… அடுத்தகட்ட மூவ்!

கடும் போட்டிக்கு மத்தியில், யார் யாரை வீழ்த்துவார்கள் என்பது ஜூன் 4ஆம் தேதி தெரிந்துவிடும்.

.



.

Previous Post

கார் விபத்தில் சிக்கிய அமைச்சர் மகன்!

Next Post

விமான நிலையத்துக்குமா? தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விமான நிலையத்துக்குமா? தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

விமான நிலையத்துக்குமா? தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In