Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மோடி அல்ல… பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அமித்ஷா… கெஜ்ரிவால் சொன்ன காரணம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 12, 2024
in அரசியல் செய்திகள்
0
மோடி அல்ல… பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அமித்ஷா… கெஜ்ரிவால் சொன்ன காரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமித் ஷாவை பிரதமராக்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கூறியுள்ள நிலையில் அதனை அமித் ஷா மறுத்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் தனது மனைவி சுனிதாவுடன் சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

விளம்பரம்

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என கேட்டும் மோடியிடம், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியை தான் கேட்பதாக கெஜ்ரிவால் கூறினார்.

பாஜகவின் விதிப்படி, 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவி வகிக்க முடியாது என்பதால், விரைவில் 75 வயதை எட்டவிருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷாவை பிரதமராக்க வாக்கு சேகரித்து வருவதாக கூறினார்.பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், மோடியே பிரதமராக தொடர்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

விளம்பரம்

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், 5 ஆண்டுகளுக்கும் மோடியே பிரதமராக தொடர்வார் என்று கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதைப் போன்று, பாஜகவில் எந்த விதியும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி தொடர்வார் என்பதில், தங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை என்றும் அமித் ஷா திட்டவட்டமாக கூறினார்.

.



.

Previous Post

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..'தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்!

Next Post

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In