ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு முன் மத்திய அரசு அமல்படுத்திய சி.ஏ.ஏ விதிகளை மறுப்பதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அறிவித்தது. அதன்தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் பா.ஜ.க, காங்கிரஸ் என இரண்டையும் விமர்சித்து வாக்கு சேகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை ஒருபோதும் கூட்டணி கட்சியாக நினைத்ததில்லை எனவும், நாடாளுமன்றத்தில் சில சமயங்களில் தங்களுக்கு ஆதரவளித்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
