கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா, மற்றொரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, ஏராளமான பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், வெளிநாட்டில் பதுங்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை இன்டர்போல் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபரை கடத்தியதாக பிரஜ்வலின் தந்தையும், தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோவை பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதன் நீட்சியாக, சொத்துப் பிரச்னை ஒன்றில் உதவி செய்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவராஜ் கவுடா மீது பெண் ஒருவர் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படியுங்கள் | மீண்டும் மாணவர்களைச் சந்திக்கும் நடிகர் விஜய்..? வெளியான தகவல்!
அதன் அடிப்படையில், தேவராஜ் கவுடா மீது 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் திவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், தேவராஜ் கவுடாவை போலீஸார் தற்போது கைது செய்தனர்.
.
