Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home ஹாட்ஸ்டார்

வீரசக்கதேவி ஆலய திருவிழா தொடக்கம்: பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் மரியாதை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 5, 2023
in ஹாட்ஸ்டார்
0
வீரசக்கதேவி ஆலய திருவிழா தொடக்கம்: பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா தொடங்கியது. கட்டபொம்மன் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவாகவும், வீரசக்கதேவி ஆலய திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுதாரர் வீமராஜா என்ற ஜெக வீரபாண்டிய கட்டபொம்மன் துரையின் வீட்டுக்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. ஜோதி ஓட்டத்துக்கு போலீஸார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். ஜோதிக்கு பின்னால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதை கண்டித்து விழாவை நிறுத்துவதாக விழாக் குழுவினர் அறிவித்தனர்.

மேலும் பாஞ்சாலங்குறிச்சி கிராம பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து வீரச்சக்கதேவி ஆலய குழுவினரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஜோதிக்கு பின்னால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடர் இடைவெளி விட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் செண்டை மேளம், ஒலிப்பெருக்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

வீரச்சக்கதேவி ஆலயக் குழுவினர் ஆலயத்தில் விழா ஏற்பாடுகளை தொடங்கினர். வீரச்சக்கதேவி ஆலய கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததியைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். வீரசக்கதேவி ஆலய விழா இன்றும் (மே 13) தொடர்ந்து நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை (மே 14) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி எஸ்பி எல்.பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

.

Tags: ஆலயகடடயலதடககமதரவழபஞசலஙகறசசமரயதவரசககதவ
Previous Post

“தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்; பள்ளி மாணவர்களை தேர்வு செய்யாத திமுக அரசு” – அண்ணாமலை சாடல் |tamilnadu bjp leader annamalai slams dmk government

Next Post

“சிவப்பு” மிளகாய் + “பச்சை” மிளகாய்.. நீங்க உடல்எடையை குறைக்கணுமா.. அப்ப இதை அவசியம் படிங்க.. ஹெல்த்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“சிவப்பு” மிளகாய் + “பச்சை” மிளகாய்.. நீங்க உடல்எடையை குறைக்கணுமா.. அப்ப இதை அவசியம் படிங்க.. ஹெல்த்

"சிவப்பு" மிளகாய் + "பச்சை" மிளகாய்.. நீங்க உடல்எடையை குறைக்கணுமா.. அப்ப இதை அவசியம் படிங்க.. ஹெல்த்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In