தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. மதுரை நகர் பகுதியில் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு உள்ளது. இந்த வெப்பத்திலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு, மதுரை மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் அய்யப்பராஜா துவங்கி வைத்த நீர், மோர், சர்பத், குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் துணைத்தலைவர் ராமராஜ், மாவட்ட செயலாளர் ஜெயமுருகன் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


