நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்த படம் கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் – த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கில்லி இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியளவில், மறுவெளியீடான திரைப்படம் இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பது இதுவே முதல் முறை.
இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளில் வெளியான தீனா, மங்காத்தா, பில்லா ஆகிய படங்கள் முதல் நாளில் முறையே ரூ.50லட்சம், ரூ.14லட்சம், ரூ.25 லட்சங்கள் மட்டுமே வசூலித்தன.
ஆனால் கில்லி திரைப்படம் முதல்நாளில் ரூ.1.25 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் கில்லி படத்தின் வசூலினை முறியடிக்கவில்லை என விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

