Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மத்திய அரசு கஸ்டடியில் இருந்து ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் மாயம்: நீதிமன்றம் அதிரடி.. அரசுக்கு‌ நெருக்கடி.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 1, 2024
in Default
1
மத்திய அரசு கஸ்டடியில் இருந்து ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் மாயம்: நீதிமன்றம் அதிரடி.. அரசுக்கு‌ நெருக்கடி.!!
75
SHARES
121
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணாமல் போனதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று (மே 1) வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2௦18 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில்  சுமார் 70,772 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டு தற்போது காணாமல் போனதாக கூறப்படும் ஹெராயின் போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாகும்.

ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் காணவில்லை என்பது பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இப்போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Heroin worth Rs 5 lakh crore goes missing

மேலும் 2018-ல் சிக்கிமில் 15,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில் 2018-ம் ஆண்டு மொத்தம் 19,691.155 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கிறது. இப்படி 2018-2020ம் ஆண்டு காலத்தில் மட்டும் 70,000 கிலோ போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி காணாமல் போன ஹெராயின் போதைப் பொருள் எங்கே போனது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் தொடர்ந்த வழக்கில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் தொடர்ந்த வழக்கு இன்று (மே 1) நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த பிறகு கிடங்கில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடி என சுட்டிக்காட்டப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், 4 வாரங்களில் நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous Post

நடிகர் சங்க கட்டடத்துக்கு 1 கோடி நிதி… அள்ளிக் கொடுத்த அமெரிக்கா செட்டில் கோலிவுட் பிரபலம்..

Next Post

சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்திய அனுஜ் தற்கொலை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்திய அனுஜ் தற்கொலை..!

சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்திய அனுஜ் தற்கொலை..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    நீதிபதிகள் சிறப்பாக நடவடிக்கை எடுத்தால் லஞ்சமும் ஊழலும் குற்றங்களும் வெகுவாக குறையும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In