Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நடிகர் சங்க கட்டடத்துக்கு 1 கோடி நிதி… அள்ளிக் கொடுத்த அமெரிக்கா செட்டில் கோலிவுட் பிரபலம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 1, 2024
in Default
1
நடிகர் சங்க கட்டடத்துக்கு 1 கோடி நிதி… அள்ளிக் கொடுத்த அமெரிக்கா செட்டில் கோலிவுட் பிரபலம்..
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழ்த் திரையுலகில் நீண்டகால பிரச்சினையாக இருந்து வருவது நடிகர் சங்கக் கட்டம். இதனை நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவுக்கு கொண்டு வரவுள்ளனர். அதன்படி கடந்த வாரம் நடிகர் சங்க கட்டட பணிகள் தொடங்கிவிட்டன. சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் நடிகர் சங்கக் கட்டட பணிகளை தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்பார்வையிட்ட புகைப்படங்கள் வைரலாகி வந்தன.  

இந்நிலையில், நடிகர் சங்க கட்டட நிதிக்காக பிரபல நடிகர் நெப்போலியன் நிதி கொடுத்துள்ளார். சீனியர் நடிகரான நெப்போலியன் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி, தசவதாரம் என பல படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல் என வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து பிரபலமான நெப்போலியன், தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கிய நெப்போலியன், இன்னொரு பக்கம் சாஃப்ட்வேர் பிஸினஸில் கலக்கி வருகிறார். 

2000 – 2006 ஆம் காலக்கட்டத்தில் நடிகர் சங்கத்தின் உபதலைவராகவும் பொறுப்பேற்றவர் நெப்போலியன். தற்போது நடிப்பில் அதிக ஆர்வம் காட்டாத அவர், நடிகர் சங்க கட்டத்துக்கு வைப்பு நிதியாக ஒரு கோடி வழங்கியுள்ளார். ரஜினி, கமல், விஜய், உதயநிதி வரிசையில் நெப்போலியனும் ஒரு கோடி கொடுத்துள்ளது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நெப்போலியன் தற்போது அதிகமாக படங்கள் நடிக்கவில்லை என்பதோடு முன்னணி நடிகர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்து அசத்தியுள்ளார்.  

Previous Post

கோவிஷீல்ட் தடுப்பூசி :தேர்தல் பத்திர நன்கொடைக்காக பாஜக இந்திய மக்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளது : அகிலேஷ் தாக்கு.

Next Post

மத்திய அரசு கஸ்டடியில் இருந்து ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் மாயம்: நீதிமன்றம் அதிரடி.. அரசுக்கு‌ நெருக்கடி.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மத்திய அரசு கஸ்டடியில் இருந்து ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் மாயம்: நீதிமன்றம் அதிரடி.. அரசுக்கு‌ நெருக்கடி.!!

மத்திய அரசு கஸ்டடியில் இருந்து ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் மாயம்: நீதிமன்றம் அதிரடி.. அரசுக்கு‌ நெருக்கடி.!!

Comments 1

  1. Rajalingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In