Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமெரிக்க பல்கலை கழகங்களின் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர் நிதியை இஸ்ரேல் நிறுவனங்களில் முதலீடு செய்வதை நிறுத்தக்கோரி மாணவ அமைப்புகள் போராட்டம்: இரும்பு கரம் கொண்டு அடக்கும் அமெரிக்கா..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 1, 2024
in Default
0
அமெரிக்க பல்கலை கழகங்களின் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர் நிதியை இஸ்ரேல் நிறுவனங்களில் முதலீடு செய்வதை நிறுத்தக்கோரி மாணவ அமைப்புகள் போராட்டம்: இரும்பு கரம் கொண்டு அடக்கும் அமெரிக்கா..
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கொலம்பியா: இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தை கைப்பற்றி போராட்டம் நடத்திய மாணவர்களை நியூயார்க் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போரை நிறுத்தக் கோரியும், அமெரிக்க பல்கலை கழகங்களின் பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை இஸ்ரேல் நிறுவனங்களில் முதலீடு செய்வதை நிறுத்தக்கோரியும், இஸ்ரேல் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள பல்கலைகழக நிதியை வேறு நிருவனங்களிக்கு மடைமாற்றவேண்டும் என்று அமெரிக்கா முழுவதும் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் கடந்த சில நாட்களாகவே போராட்டம் பரவி வருகிறது. நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் பல பல்கலைக்கழகங்களுக்கும் பரவியது.

அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களான கொலம்பியா, ஹார்வர்ட், யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

‘Gaza solidarity encampment’, அதாவது காசாவுக்கு ஆதரவாக கூடாரங்கள் அமைத்துப் போராடுதல் என்ற தலைப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவுக் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த போராட்டம் தீவிரமடைந்தது. மாணவர்கள் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தை கைப்பற்றி காவலர்கள் நுழையாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தினர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தின் எச்சரிக்கை மீறி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது. அவர்களின் போராட்டத்தை கலைக்க நியூயார்க் காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டதை தொடர்ந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடமான ஹாமில்டன் அரங்கை கைப்பற்றினர். மேலும், அங்கு பறக்கவிடப்பட்டிருந்த அமெரிக்க கொடியை அகற்றி பாலஸ்தீன கொடியை பறக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

நீண்ட நேரம் தொடர்ந்த இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நியூயார்க் போலீஸார் முயற்சி எடுத்தனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் ஹாமில்டன் அரங்கின் இரண்டாவது மாடியின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து மாணவர்களை அதிரடியாக கைது செய்தனர். மாணவர்களின் கைகளை கட்டி ஒவ்வொருவராக மாடியில் இருந்து அவர்களை கீழே இறக்கிய காவலர்கள் தங்களின் வாகனங்களில் அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும்போது பாலஸ்தீனம் குறித்த முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர். மாணவர்கள் கைதை அடுத்து, கொலம்பியா பல்கலைக்கழகம் முழுவதும் நியூயார்க் போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதேபோல், நாட்டின் பிற பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் போராட்டத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு துரிதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

சூரத்தை போலவே கடைசி நேரத்தில் இந்தூர் தொகுதியிலும் பாஜகவை வெற்றி பெறவைத்த காங். வேட்பாளர்..!

Next Post

அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம்… அமைச்சர் மா.சு ஆதங்கத்தை அடுத்து தேர்தல் அதிகாரி அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம்… அமைச்சர் மா.சு ஆதங்கத்தை அடுத்து தேர்தல் அதிகாரி அறிவிப்பு

அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம்... அமைச்சர் மா.சு ஆதங்கத்தை அடுத்து தேர்தல் அதிகாரி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In