Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

”விவிபேட் வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது” : திருமாவளவன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 26, 2024
in Default
1
”விவிபேட் வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது” : திருமாவளவன்
31
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விவி பேட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என தொல்.திருமாவளவன் இன்று (ஏப்ரல் 26) தெரிவித்துள்ளார்.

வாக்கு இயந்திரத்துடன் விவிபேட்டில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ்கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த விசாரணையின் போது நீதிபதிகள், வாக்கு இயந்திரங்கள் குறித்து எழுப்பிய பல கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து, தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என கூறிய நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இரு நீதிபதிகள் அமர்வு இன்று (ஏப்ரல் 26) இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர். அதில், மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை(விவிபேட்) முழுமையாக எண்ணக்கோரி தாக்கல் செய்யப்பட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதுகுறித்து, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஒரு அமைப்பை சந்தேகப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் யூகம் செய்திருப்பதாகத்தான் கருத முடிகிறது.

எலக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட அனைத்து கருவிகளையும் அனைவரும் கையாள முடியும் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

விவிபேட் மூலம் தேர்தலில் தவறுகள் நடக்ககூடாது. நேர்மையான முறையில் இந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டும். தேர்தலில் வெளிப்படைத்தன்மை மிக மிக முக்கியம் என்ற நோக்கத்தில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டது.

ஒவ்வொருவரும் வாக்களிக்கும்போது ஒப்புகை சீட்டு வருகிறது. அந்த ஒப்புகை சீட்டு 1௦௦% வரும்போது, அதனை எண்ணி வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது. இதனால் அரசுக்கு என்ன நஷ்டம் ஏற்பட போகிறது.

அப்படி பார்த்தால், ஒப்புகை சீட்டு முறையே தேர்தலில் வேண்டாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் கடைசி புகழிடம் உச்சநீதிமன்றம் தான். அதுவும் சில சமயங்களில் இதுமாதிரியான அதிர்ச்சியான தீர்ப்புகளை தருவது வருத்தத்தை தருகிறது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விவிபேட் ஒப்புகைச்சீட்டை நூறு சதவீதம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கடந்த மார்ச் மாதம் திருமாவளவன் மனு அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

Next Post

தலையில் கைவைத்த எடப்பாடி பழனிச்சாமி… ஜூன் மாதத்தில் அதிமுகவில் வெடிக்கபோகும் சம்பவம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தலையில் கைவைத்த எடப்பாடி பழனிச்சாமி… ஜூன் மாதத்தில் அதிமுகவில் வெடிக்கபோகும் சம்பவம்..!

தலையில் கைவைத்த எடப்பாடி பழனிச்சாமி... ஜூன் மாதத்தில் அதிமுகவில் வெடிக்கபோகும் சம்பவம்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இவர் வருத்தப்படுகிறார் ஆனால் எதிர்தரப்போ சந்தோஷப்படுகின்றனர்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In