விழுப்புரம் அடுத்த ஆ. கூடலூர் கிராமத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தியிடம் மது போதையில் தகராறில் ஈடுப்பட்டதோடு அவரை தாக்கி செல்போனையும் பறித்து சென்ற வழக்கில் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி என்பவரை காணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தன்னை தாக்கிய திமுக நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம நிர்வாக அலுவலர் சாந்தி வாக்கு சாவடியில் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.
அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்து நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கொடுத்த புகாரில் பின் வாங்காமல் உறுதியாக இருந்த பெண் கிராம நிர்வாக அலுவலருக்கும் கைது நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கும் எனது வாழ்த்துக்கள்