சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மீட்பு வட்டாட்சியராக பணியில் இருப்பவர் ராஜரத்தினம். இவர் ஒரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற ஒரு ஆபாசமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இவர் மீது பல்வேறு விதமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில் இவர் பணியாற்று இடங்களில் எல்லாம் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பெண்களுக்கு தொந்தரவு என பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். தற்பொழுது அவருடன் பணியாற்றும் டைப்பிஸ்ட் பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோவை அவரே எடுத்து அவரை கைபேசியில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மற்றும் 2020 ஆம் ஆண்டு தேவகோட்டையில் வட்டாட்சியராக பணியில் இருந்த போது ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இழந்த புகாரில் அப்போதே மாவட்ட ஆட்சியரால் பணி மாறுதல் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
