Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 24, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!
58
SHARES
94
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட பெண்ணைக் குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்ற செய்தியும், தொலைக்காட்சிகளில் அவரது புகைப்படம் மற்றும் அவர் ரயில் நிலையத்தில் உலாவிய சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.

அதன் மூலமாக, சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் உடனடியாக சென்ட்ரல் ரயில்வே காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள பெண்ணைக் குறித்த விவரங்களை வழங்கியுள்ளனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண், கேரள பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா என்பது தெரியவந்துள்ளது. அவரது கணவர் அனுஷ்க்கும், இவருக்குமிடையே அடிக்கடி சிறுசிறு தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, ரேஷ்மா கணவரை விட்டுத் தனியாகச் சென்று அவருடைய பெற்றோருடன் கோயம்புத்தூரில் தங்கி வந்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரேஷ்மா செவிலியராக ஒரு வருடம் வேலை செய்துள்ளார். தற்போது காவேரி மருத்துவமனையில் கடந்த 3 மாதமாக வேலை செய்து வந்துள்ளார்.

இவரது தாயார் சியாமளாவும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். தனது தாயார் இறந்த துக்கம் தாங்காமல் ரேஷ்மா பல நாட்களாக சோகத்தில் இருந்துள்ளார். இந்நிஅலியில், இவரது தந்தை ரமேஷ், ரேஷ்மாவுக்கு துணையாக கடந்த இரண்டு மாதமாக ரேஷ்மா வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று(ஏப். 23) மதியம் ரேஷ்மா யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ரேஷ்மாவின் தந்தை ரமேஷ் அக்கம் பக்கத்தினர் மற்றும் சொந்தக்காரர்கள் வீடுகளுக்கு நேரில் சென்றும், போன் செய்தும் விசாரித்ததில் ரேஷ்மா குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, ரேஷ்மாவின் தந்தை ரமேஷ், தனது மகளைக் காணவில்லை என்று சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, வீட்டை விட்டு வெளியேறி, ரேஷ்மா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஓய்வறையின் அருகே உள்ள இரும்பு ரேக்கில் தான் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரேஷ்மா குறித்த விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், கடைசியாக அந்த பெண் ரயில் நிலையத்தில் நடந்து சென்றது பதிவாகியுள்ளதை கண்டறிந்து உறுதிசெய்துள்ளனர்.

இதனையடுத்து, உயிரிழந்த ரேஷ்மாவின் உடல், உடல்கூராய்வுக்குப் பின் சென்னையிலிருந்து அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

.

Previous Post

இந்தியர்களுக்கான புதிய காலணி அளவு (BHA) முறை! அதிரடி காட்டும் இந்தியா!

Next Post

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In